70 ஆண்டுகால இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நேரு தொடங்கி இந்திராகாந்தி , ராஜீவ்காந்தி வரை மிகப்பெரிய செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய தலைவர்கள்.இன்றளவும் ஆளுங்கட்சியின் விமர்சன பக்கங்களில் முன்னணியில் இருப்பவர்கள். அவவர்கள் மறைந்து பல மாமாங்கங்கள் ஆனாலும் அரசியலும் அரசு சார்ந்த துறைகளில் வரும் விமர்சனங்களில் அவர்களின் பெயர்கள் இன்றைய ஆளுங்கட்சியால் அச்சத்தில் உச்சரிக்கப்படும் அளவுக்கு அவர்களின் அரசியல் அழுத்தமான பதிவுகளை பதித்திருக்கின்றது என்பது மிகையல்ல. மேற்கண்ட தலைவர்களாவது அரசு மற்றும் அரசியல் களத்தில் உச்சத்துக்கு வர எந்த பகீரத பிரயத்யனமும் செய்யவில்லை அரச பரம்பரை மாதிரி மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.அவர்களின் செயல்பாடுகள் காலம் கடந்தும் மக்களால் நினைவுகூரப்படுகிறது. ஆனால் ராகுல்காந்தி அரசியல் கட்சியின் தலைவரும் இல்லை அரசு பதவியில் உச்சத்திலும் இருந்ததில்லை ஆனாலும் ஆளும் அரசின் அச்சப்பார்வை அவரிடம் இருந்து விலகுவதில்லை. பப்பு என்று அவரை கருத்துருவாக்கம் செய்து களத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம் என்று நினைத்து 2014ல் தொடங்கிய ராகுல் எதிர்ப்பு அரசியல் இன்றும் ஆளும் அரசினால் வலுவாக பிரயோகப்படுத்தப்படுகிறது என்றால் ராகுல் நேரு, இந்திரா, ராஜீவ் போன்றவர்களைவிட ராகுல் வலிமையான தலைவர் என்றே காலம் அடையாளம் காட்டுகிறது. ஆம் ராஜ குடும்பத்து வாரிசாக நேரு, இந்திரா, ராஜீவ் அடையாளப்படுத்தப்பட்ட மாதிரி தான் ராகுலும் அடையாளப்படுத்தப்பட்டார் அவரும் ஆரம்பத்தில் தன்னை ராஜகுமாரனாகத்தான் உணர்ந்திருப்பார். ஒருவேளை ராகுலின் தாய் வேற்றுமதத்தை சாராத இந்தியராக இந்துவாக இருந்திருந்தால் ராகுலின் அரசியல் பயணம் பட்டாபிஷேகமாகவே நடந்திருக்கும்.இங்கே தான் அரசியல் புள்ளி வேறு திசைக்கு பயணிக்கிறது நரசிம்மராவ், பிராணாப் முகர்ஜி போன்ற ஆர் எஸ் எஸ் ஆதரவு தலைவர்கள் ஆக்ரமிப்பில் இருந்த கட்சி ராகுலின் தற்போதைய இடதுசாரி சிந்தனையோட்டத்தில் பயணிக்க மிக முக்கிய காரணம் ஆர் எஸ் எஸ் ன் அரசியல் வடிவமான பிஜேபியின் மத அரசியல்தான்


அந்த மதஅரசியல் சதுரங்கத்தில் தனது தாய் சோனியாவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டபோதும் இது சராசரி அரசியல் என்றே கடந்து சென்ற ராகுலுக்கு அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிஜேபியின் ஆட்டம் இதுவரை இவரது கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, தந்தை ராஜீவ் கூட கண்டிராத அரசியலை அறிமுகப்படுத்தியது. அதுவரை இடதுசாரி அரசியலுக்கு எதிரான திசையில் பயணித்த காங்கிரஸ் கட்சியின் பயணம்
ராகுல் காந்தி என்கிற இளவரசனின் பயணம் சராசரி அரசியல்வாதிகளின் தொடக்கம்போல் அமைந்தது. இவ்வளவு நெருக்கடிகள் தனக்கே வருகிறது என்றால் மத, சதி அரசியலின் கோரமுகம் சாமானிய மக்களை எப்படி சூறையாடும் என்பதை உணரத்தொடங்கினார். காலம் ஒரு ராஜகுமாரணை நடைபயணம் செல்லவைத்தது சாதி. மதங்களால் சிதைக்கப்பட்ட மக்களின் அவலங்களை அடையாளம் காட்டியது. இதற்கு முன் மேல் மட்ட அதிகார சுவையை மட்டுமே அறிந்திருந்த தலைவர்களின் take it easy டைப் அரசியலை உள்வாங்கியிருந்த ராகுல் இப்போது மக்களின் அவல அரசியலை உள்வாங்கியதோடு மட்டுமல்லாமல் மக்களோடு மக்களாக அவர்களின் வாழ்வியலோடு கலந்த அரசியலை செய்வது இந்திய அரசியலில் இதுவரை எந்த தேசிய தலைவர்களும் செய்யாத அரசியல் . இன்னும் ஒருபடி மேலே போய் சொல்வதென்றால் தேசத்தந்தை காந்தி கூட இந்துத்துவ மத அரசியல் வளையத்தில் இருந்து முழுமையாக வெளியேற முடியவில்லை ஆனால் ராகுல் முழுவதும் மத, சாதி அரசியலை துடைத்தெரிந்துவிட்டு முற்போக்கு அரசியலுக்கு பயணிப்பது எதிர்கால இந்திய ஒன்றிய அரசியல் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பது உறுதி.. திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here